யாழ். குடாநாட்டில் இந்த வருடம் எச்.ஐ. வி தொற்றுக்கு ஆறு பேர் புதிதாக இலக்காகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பாலியல் நோய்த் தடுப்புப் பொறுப்பு வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்துள்ளார். இவர்களில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் அடங்குகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்கானவர்கள் பலர் இந்தச் சமூகத்திலுள்ளனர். அவர்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென எண்ணுபவர்களே தங்களைப் பரிசோதித்துக் கொள்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் இவ்வாறு தொற்றுக்கிலக்காகிய இன்னும் பலரிருக்கக் கூடும். ஆறு பேரே இவ்வருடம் இடம்பெற்ற பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, கடந்த-2012 ஆம் ஆண்டு 12 பேரும், 2015 ஆம் ஆண்டு ஒருவரும் யாழ்.மாவட்டத்தில் எச்.ஐ, வி தொற்றுக்கு இலக்காயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment