//]]>

Thursday, December 15, 2016

யாழில் இடம்பெற்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு (Photos)


யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் விழுது ஆற்றல் மையத்தின் ஏற்பாட்டில் "பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல்-நல்லிணக்க வழிப் பாதையின் முன்னேற்றப் பாதை" எனும் தொனிப் பொருளிலான பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு இன்று வியாழக்கிழமை(15) யாழ்.ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம்,மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ,திருகோணமலை,புத்தளம் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் போது பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 

குறித்த மாநாட்டில் வளவாளர்களாக இலங்கைச் சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரவீந்திர ரட்நாயக்க, வடமேல் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் விக்கிரமசிங்க,யாழ். மாவட்டச் செயலக உதவித் திட்டமிட்டல் பணிப்பாளர் திருமதி- மோகனேஸ்வரன், பேராதனைப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.ரமேஷ், வடமாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் நளாயினி ஆகியோர் கலந்து கொண்டனர்.   

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment