தமிழக முன்னாள் முதல்வர் செல்வி- ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் மற்றும் மாற்றங்கள் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கி வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் ஆளுநர் பொறுப்புக் குறித்த தகவலொன்று கசிந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகத்தான் இருக்கிறார். வித்யாசகர்ராவ் தலைமையில் ஜெயலலிதா இறந்த டிசம்பர்- 05 ஆம் திகதி நள்ளிரவு வேளையில் ஓ. பன்னீர்ச் செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மத்திய அரசின் வழிநடத்தலின் பேரில் வித்யாசாகர் ராவ் தமிழக ஆட்சியில் முக்கிய முடிவுகளையும் எடுத்துள்ளார். இந் நிலையில் புதிய ஆளுநர் நியமனத்திற்கான முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
தமிழகத்தின் ஆளுநராக கர்நாடக பாஜக மூத்த தலைவர் சங்கரமூர்த்தியை நியமிக்க இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. இவர் ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவருமாவார். 1940 இல் கர்நாடகா ஷிமோகாவில் அனுமந்தப்பா மற்றும் காமாக்ஷம்மாவுக்கு மகனாகப் பிறந்த இவர் ஆர்ய வைஸ்ய சமூகத்தைச் சேர்ந்தவர்.
'தென்னிந்திய மாநிலங்களில் கவர்னராகப் பணியாற்ற விரும்புகிறேன் எனச் சங்கரமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் சூழலில் தமிழகத்துக்கு அவர் கவர்னராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில மாதங்களாகவே இருந்து வருகிறது. ஆனால், அது குறித்த உத்தியோகபூர்வ எந்தத் தகவலும் வெளியாகவில்லை
எனினும் இவர் நியமிக்கப்பட்டால் எதிர்ப்புகள் எழலாம் என மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment