கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களைப் புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானமொன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை (24) கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது. இதன் போதே குறித்த தீா்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
இணைத்தலைவா்களான வடமாகாண முதலமைச்சா் க.வி. விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினா்களான சிவஞானம் சிறீதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டப் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் குறித்ததீா்மானம் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.
இதனைத் தொடா்ந்து இணைத்தலைவா்களும் அங்கீகரிக்க கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment