தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்க ராகுல் காந்தி, அதிமுக-வின் எம்.பி தம்பித் துரை, அமைச்சர் ஜெயக்குமார் போன்ற பல கட்சியின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் வைத்தியசாலை நோக்கிச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்க ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனை முன் திரண்டிருந்த தி.மு.க தொண்டர்கள் வைகோவிற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதுடன், மருத்துவமனைக்குள் செல்லே விடாமல் அவர் பயணித்த பயணித்த வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர். அத்துடன் அவர் பயணித்த வாகனம் மீது கல்வீசியும் தாக்குதல் நடாத்தினர்.
இதனால், தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்க்காமல் திரும்பிச் சென்றார் வைகோ.
பின்னர் வைகோ அளித்த பேட்டியில், 'இந்தச் சம்பவம் தூண்டுதலாலே தான் நடந்திருக்கிறது' என்றார்.
இதேவேளை, குறித்த சம்பவத்துக்குத் தி.மு.க தரப்பிலிருந்து மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் வருத்தம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment