நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 47,834 பேர் டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக டெங்கு நோய்த் தொற்றுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த வருடத்தில் டெங்கு நோயின் தாக்கத்தால் 77 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் டெங்கு நோய்ப் பிரிவு நடாத்திய ஆய்வுக்கமைய குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடத்தில் 29,777 வரையானோரே டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment