முல்லைத் தீவு குமுழமுனை மகாவித்தியாலயப் பரீட்சை நிலையத்தில் மாணவனுக்காகக் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய நபரும், மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் கணிதபாடப் பரீட்சையில் தோல்வியுற்ற மாணவனுக்குப் பதிலாகப் பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சம்பந்தப்பட்ட இருவரையும் இன்று வியாழக்கிழமை முல்லைத் தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment