தமிழகத்தில் அசைக்கமுடியாத கட்சியாக இருந்த அ.தி.மு.க தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து அவர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சசிகலாவைக் கட்சியை வழிநடத்திச் செல்ல தலைமை தாங்கும்படி வலுயுறுத்தி வருகிறது.
அண்மையில் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.காவை வழி நடத்திச் செல்லச் சசிகலா முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், கட்சித் தொண்டர்கள் பலர் சசிகலா பொதுச்செயலாளர் ஆக விரும்புவதை தாங்கள் விரும்பவில்லை என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க எம்பிக்கள் 49 பேரும் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்களில் சசிகலா புஷ்பா கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சசிகலா புஷ்பாவைத் தவிர 49 எம்.பிக்களும் சசிகலாவை நேரில் சந்தித்து அ.தி.மு.க வின் தலைமையை நீங்கள் தான் ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment