கூரிய வாளொன்றுடன் பரீட்சை நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த பரீட்சார்த்தியொருவர் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த -06 ஆம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் பரீட்சையின் இறுதி நாளான இன்று பரீட்சையில் தோற்றுவதற்காகக் கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரிக்குக் குறித்த மாணவர் வாளுடன் சென்றுள்ளார்.
சுமார் இரண்டு அடி நீளமுள்ள வாளை தனது குடைக்குள் அவர் மிகவும் சூட்சுமமாக வைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில் பரீட்சை நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸார் குறித்த மாணவரைச் சோதனைக்குட்படுத்தி வாளைக் கைப்பற்றினர்.
எனினும், குறித்த மாணவர் இன்று பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் அவரின் செயற்பாடு குறித்துப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment