//]]>

Sunday, December 25, 2016

"கல்வி மூலம்தான் பெண்களுக்கு அதிகாரமளிக்க முடியும்"



கல்வி மூலம்தான் பெண்களுக்கு அதிகாரமளிக்க முடியும் என்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.




பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துவரும் அரசுசாரா அமைப்பான மகிளா தக்ஷதா சமிதி சார்பில் நிறுவப்பட்ட பன்சிலால் மலானி செவிலியர் கல்லூரியை தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் சனிக்கிழமை தொடங்கி வைத்து பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தம் 74 சதவீதம் பேர்தான் உள்ளனர் என்பதும், பெண்களில் 65 சதவீதம் பேர் மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பதும் துரதிருஷ்டவசமானது.

பெண்களுக்கு அதிகாரமளிக்காத சமூகம் இறுதியில் தோல்வியைச் சந்திக்கும். பெண்களுக்கு அதிகாரமளிப்பது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டில் சுகாதாரத் துறையில் உள்கட்டமைப்புகள் போதுமான அளவுக்கு இல்லை.

அரசு, தனியார் அமைப்புகள் உள்ளிட்டவை ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவதே இந்தக் குறையைப் போக்க ஒரே தீர்வாக இருக்கும்.

சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் ஆகியவற்றை ஓர் அரசால் மட்டும் தனித்து அளிக்க முடியாது என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment