யாழ்.சாவகச்சேரி சங்காத்தானைப் பகுதியில் இன்று சனிக்கிழமை(17) பிற்பகல்- 01 மணியளவில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் பத்துப் பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாகத் துடிதுடித்துப் பலியாகியுள்ளனர் .
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும், கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த தனியார் ஹயஸ் வாகனமும் சங்கத்தானை வைத்தியசாலைக்கு முன்பாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த பத்துத் தென்னிலங்கை சிங்களப் பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், ஹயஸ் வாகனத்தில் பயணித்த ஏனைய நால்வரும் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் வானின் ரயர் காற்றுப் போனமையால் வீதியை விட்டு விலகி வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்துடன் மோதியமையே விபத்துக்கான காரணமெனத் தெரிய வருகிறது.
மேலதிக விசாரணையினைச் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment