//]]>

Saturday, December 31, 2016

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் விமரிசை (Video, Photos)


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியினதும், யாழ். ஏழிசை மிருதங்க நர்த்தனாலயத்தினதும் மாணவனாகிய ருக்மணிகாந்தன் சாரங்கனின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(30) பிற்பகல்-04 மணிக்கு யாழ். இலங்கைவேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா பிரதம விருந்தினராகவும், கலாபூஷணம் இசைத்தென்றல் ம.யேசுதாசன், தண்ணுமை வேந்தன் மா.சிதம்பரநாதன், சிரேஷ்ட சுங்கப் பணிப்பாளரும், சட்டத்தரணியுமாகிய எம்.ஆர். ராஜ்மோகன் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இடம்பெற்ற அரங்கிசையில் பாட்டு - இசைமாணி தவநாதன் றொபேட், வயலின் - அம்பலவாணர் ஜெயராமன், கெஞ்சிரா – கலைமாணி நா.சிவசுந்தரசர்மா, முகர்சிங் - கலாவித்தகர் என். சதீஸ்குமார், கடம் - இளஞ்சுடர் ஞானவேல் வசந், தம்புரா – நுண்கலைமாணி க.ரஜீவன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் அரங்க பூஜையை சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த சச்சிதானந்த சர்வேஸ்வரக் குருக்கள் ஆற்றினார். ருக்மணிகாந்தன் சஹானா இறைவணக்கம் இசைத்தார். ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜி.வி. இராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் சார்பில் வரவேற்புரை ஆற்றினார்.

யாழ். பல்கலைக்கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் சுகன்யா அரவிந்தன் மதிப்பீட்டுரையை மேற்கொண்டார். வ.ருக்மணிகாந்தன் நன்றியுரை ஆற்றினார்.

அரங்கேற்றம் கண்ட சாரங்கன் பிரபல அண்ணாவியார் அமரர் சி.ஞானப்பிரகாசம் அப்பாலையின் பூட்டனும் புல்லாங்குழல் கலைஞர் அமரர் ஜி.எஸ். வசந்தகுலசிங்கத்தின் பேரனும் ஆவார்.

படங்கள்:- ஐ.சிவசாந்தன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment