வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு சபைக்குட்பட்ட மயானங்களை தாவரவியற் பூங்காக்களாக மாற்றும் நோக்கில் வலி.தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி மயானங்களில் வலி.தெற்குப் பிரதேச சபையால் மரநடுகை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக நேற்றுப் புதன்கிழமை(07) நண்பகல்-12 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பயன்தகு நிழல் மரங்களும், பூக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வலி.தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் ரி. சுதர்சன் மற்றும் கொத்தியாலடி இந்து மயான அபிவிருத்திச் சபையின் செயலாளர் பொன்னம்பலம் தேவராஜா ஆகியோர் இணைந்து குறித்த மரங்களை நாட்டி வைத்தனர்.
வடமாகாண மாரநடுகை மாதத்தை முன்னிட்டு வலி.தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள 20 மயானங்களிலும் இந்த மரநடுகைச் செயற்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருதாக வலி.தெற்குப் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment