//]]>

Friday, December 9, 2016

வடக்குப் போக்குவரத்தில் விபத்துக்களைத்தடுக்க நடவடிக்கை...(Photos)


வடமாகாண போக்குவரத்து அமைச்சால் ஐந்து மாவட்டங்களிலும் சாரதிகள், நடத்துனர்களுக்கான விசேட செயலமர்வுகள் தற்போது நடாத்தப்பட்டு வருகின்றன. 


வடக்கு மாகாணத்தின் போக்குவரத்தைப் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதும் பாதுகாப்பானதுமாக வழங்கவேண்டும் எனும் வடக்குப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் திட்டத்திற்கு அமைவாக, வட மாகாண போக்குவரத்து அமைச்சினால் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதான இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், நடத்துனர்கள், தனியார் பேருந்துகளின் சாரதிகள், நடத்துனர்கள், முச்சக்கரவண்டிச்சாரதிகள் ஆகியோரை அந்தந்த மாவட்டங்களில் ஒன்றிணைத்துப் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான முழுநாள் விசேட பயிற்சிச் செயலமர்வு நடாத்தப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment