//]]>

Friday, January 27, 2017

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 22 வீதிகள் புனரமைக்கத் தீர்மானம்

யாழ். நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த வருடம் சபையின் நிதியில் 22  வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார். குறித்த வீதிகள் 29.674 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீதிகளின் புனரமைப்பு வேலைகள் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, உதயபுரம் 7 ஆம் குறுக்கு, 15 ஆம் குறுக்கு வீதிகள், ராஜவீதி, கொக்குவில் பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை, கொக்குவில் மேற்கு நாகலிங்கம் வீதி, முத்தட்டு மட இரண்டாம் வீதியின் கிழக்கே போகும் ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு பாடசாலை வீதியின் குறுக்கு ஒழுங்கை, கலட்டி முந்தல் வீதி, கோண்டாவில் கிழக்கு நாராயணன் வீதி, இராமலிங்கம் வீதியின் வலது பக்க முதலாம் ஒழுங்கை, குளப்பிட்டி சேர்ச் வீதி, திருநெல்வேலி முருகன் வீதியின் முதலாம் ஒழுங்கை, திருநெல்வேலி கேணியடி முன் ஒழுங்கை, பூநாறி வீதியின் வாய்க்கால் கரை ஒழுங்கை, வன்னியசிங்கம் வீதி, ஆனைவிழுந்தான் வீதி, ஆடியபாதம் வீதியிலிருந்து வரும் செங்குந்தா வீதி, பிரம்படி லேன் குறுக்கு ஒழுங்கை, கொக்குவில் தபாற்கந்தோர் வீதி முன் ஒழுங்கை, ஜே- 124 நந்தினி பேக்கரி முன் வீதி, ஜே-121 சரஸ்வதி மில் முன் ஒழுங்கை, கலட்டி 3 ஆம் ஒழுங்கை, ஜே-119 கோண்டாவில் கோகுல வீதி ஆகிய வீதிகளே இவ்வாறு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன. 

அத்துடன், பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரு தண்ணீர் ஓடும் வாய்க்கால்கள் 3.8 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment