யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஸ்ரீ துர்க்கா முன்பள்ளிக்குப் பல இலட்சம் ரூபா நிதியில் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
புன்னாலைக்கட்டுவன் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரும், சமாதான நீதவானுமான இரத்தினசிங்கம் கெங்காதரனின் பெருமளவான நிதிப் பங்களிப்பிலும், அவரது சகோதரர்களின் ஒரு தொகை நிதிப் பங்களிப்பிலும் முன்பள்ளிக்கான புதிய கட்டடம் அமையப் பெற்றுள்ளது. அமரத்துவமடைந்த தமது தாய், தந்தையரின் ஞாபகார்த்தமாக இந்தப் புதிய முன்பள்ளிக்கான கட்டடத்தை அமைத்துள்ளனர்.
புதிய முன்பள்ளிக் கட்டடத்திற்கான திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை-09 மணியளவில் ஸ்ரீ துர்க்கா சனசமூக நிலையத் தலைவர் இ.விஷ்ணுரஞ்சன் தலைமையில் இடம்பெறும்.
குறித்த விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கட்டடத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைப்பார்
0 comments:
Post a Comment