யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் 89 வயதான சபா-வடிவேலய்யா என்ற முதியவர் தன்னை வளர்த்தாளாக்கி அமரத்துவமடைந்த சிறிய தாயாரினதும், மனைவியினதும் ஞாபகார்த்தமாக 'முத்து மணி மண்டபம்' என்ற பெயரில் பொதுநோக்கு மண்டபமொன்றை அமைத்துள்ளார். சுமார்-20 இலட்சம் ரூபா செலவில் இந்தப் பொதுநோக்கு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொதுநோக்கு மண்டபம் மூலமாக யோகாசனம், ஓவியம், சிற்பம், நாடகம், ஆன்மீக நெறிப் பயிற்சி வகுப்புக்கள் போன்றன இலவசமாக நடாத்தப்படவுள்ளன. அத்துடன் சமூகத்திற்குப் பயன்தரு நூல்களையும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் வாசித்து நன்மை பெறும் வகையில் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.
'வளரும் வாழ்விற்கு வழிகாட்டும் வாரியம்' என்ற பெயரில் சபையொன்றை விரைவில் உருவாக்கி அதன் ஊடாக மேற்படி சேவைகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை(27) குறித்த மண்டபம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment