யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் இன்று மாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட பெண்கள் விடுதியின் முதலாம் மாடியிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் விடுதியின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் இருக்கும் மாணவிகளை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. எனினும் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக சமூகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
விடுதியில் தீ விபத்து ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஒரு மாணவி உறங்கிக்கொண்டிருந்ததாகவும், ஏனைய மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதியை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தீப்பரவல் ஏற்பட்ட பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்படுவதால் உள் நுழைவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை எனவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மாணவியொருவர் மின்னழுத்தியை நீண்ட நேரமாக அணைக்காமையே தீ விபத்துக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment