//]]>

Monday, April 10, 2017

நீர்வேலியில் சூரபன்மன் வதைப்படலம் நூல்வெளியீடு (Photos)


கந்தபுராணம் சூரபன்மன் வதைப்படலம் பாடல்கள் மற்றும் பதவுரை, பொழிப்புரையுடன் கூடிய நூல் வெளியீட்டு விழா 10.04.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நீர்வேலி கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் த.நடராஜா தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

ஆலயப்பிரதம குரு அமரர் சுவாமிநாத இராசேந்திரக் குருக்களின் 17 ஆவது ஆண்டு நினைவு அர்ப்பணமாக ஆலயக் கந்தசட்டி உற்சவத்தின் போது இடம்பெறும் கொடியேற்றத் திருவிழா உபயகாரர் ஆகிய சிதம்பரநாதர் வல்லிபுரம் குடும்பத்தாரால் இந்நூல் வெளியிடப்பட்டது.

நிகழ்வில் வரவேற்புரையை ஆலய பரிபாலன சபைச் செயலாளர் க.மகாலிங்கமும் ஆசியுரைகளை நீர்வேலியின் குருமூர்த்தங்களான பிரம்மஸ்ரீ கு.தியாகராசக் குருக்கள், பிரம்மஸ்ரீ சா.சோமதேவக் குருக்கள் ஆகியோரும் அருளுரையை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளும் வாழ்த்துரைகளை சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம், நீர்வேலி தெற்கு மாதர்சங்கத் தலைவி ருக்மணி ஆனந்தவேல் ஆகியோரும் வழங்கினர்.

அமரர் சுவாமிநாத இராசேந்திரக் குருக்கள் நினைவுப் பேருரையை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆற்றினார். கந்தபுராணம் சூரபன்மன் வதைப்படலம் குறித்த வெளியீட்டுரையை செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் வழங்கினார். ஆலயப் பரிபாலனசபைப் பொருளாளர் சி.தயாநாதன் நன்றியுரை ஆற்றினார்.

நீர்வேலியின் கந்தபுராணபடனப் பாரம்பரியத்தின் சிறப்புக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும் கந்தபுராணபடனத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இவ்வெளியீடு அமைந்திருப்பதைப் பலரும் தமது உரைகளின் போது பாராட்டிப் பேசினர். 















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment