யாழ்குடாநாட்டில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடிக்காணப்படுகின்றது.
காணாமல் ஆக்கப் பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலுமே மேற்படி ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டது.
வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும், பேரூந்து சேவைகள் நிறுத்தப்பட்டும், பாடசாலைகள் மூடப்பட்டும் யாழ்ப்பாணமே வெறிச்சோடிக் காணப்பட்டது.
வடக்கின் ஏனைய பகுதிகளிலும், கிழக்கிலும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-
0 comments:
Post a Comment