//]]>

Friday, April 28, 2017

அட்ஷய திருதியை முன்னிட்டு யாழ்நகர் நகைக்கடைகள் விழாக்கோலம் (Photos)


அட்சய திரிதியையான இன்று 28.04.2015 யாழ்ப்பாண முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அத்துடன் நகைக்கடைகளும் வாழைக்குலை, தோரணம், மாவிலை கட்டி கும்பம் வைத்து விழாக்கோலம் பூண்டிருந்தன.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய 3-வது திரிதியையான வளர்பிறை திரிதியை ‘அட்சய திரிதியை’ என்று அழைக்கப்படுகிறது. ‘அக்ஷயா’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் ‘எப்போதும் குறையாது’என்பது அர்த்தம். இந்த நாள் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக, தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு, மனை போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திரிதியை அன்று சிறிய குண்டுமணி அளவு தங்க நகை வாங்கினால் கூட அந்த ஆண்டு முழுவதும் செல்வ செழிப்போடு வாழலாம் என்கிற பேராசை மக்கள் மனதில் சமீபகாலமாக நிலைத்து விட்டது.

படங்கள்: ஐங்கரன் சிவசாந்தன்-
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment