//]]>

Tuesday, July 25, 2017

இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம்!: வடக்கு முதல்வர் கண்டனம்

நல்லூர்ப் பகுதியில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை  வடக்கு மாகாண முதலமைச்சர்  சி. வி. விக்கினேஸ்வரன் கடுமையாகக் கண்டித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உயிர் நீத்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிர் நீத்த பொலிஸ் அலுவலரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில் வன்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அருமந்த ஒருஉயிரைப் பறித்தமையால் அன்னாரின் குடும்பம் பலவித இன்னல்களுக்கும் இடர்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி வந்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களின் உள்ளெண்ணம் பற்றித் தாம் ஆராய்ந்து வருவதாக வடமாகாண உப பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவருக்குப் பணித்துள்ளேன் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment