தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை(14.12.2017) யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல்-05 மணி முதல் குறித்த நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் எஸ். பசுந்தமிழன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அன்ரன் பாலசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிறப்புரையாற்றினார்.
0 comments:
Post a Comment