நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடமாகாணச் சுகாதாரத் தொண்டர்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று வியாழக்கிழமை(14) தனது அலுவலகத்திற்கு அழைத்துக் கலந்துரையாடினார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் வடமாகாணச் சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைத் தனது அலுவலகத்திற்கு அழைத்த வடமாகாண ஆளுநர் உடனடியாக மத்திய அமைச்சர் ராஜித சேனாரட்ணவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தற்போதுவரையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான செயல்திட்டம் நடைபெற்ற வண்ணமிருப்பதாகவும், தேர்தலின் பின்னர் அதற்குரிய முடிவுகள் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து வடமாகாண ஆளுநர் குறித்த போராட்டத்தினைத் தற்போது கைவிடுமாறும் தேர்தலின் பின்னர் என்னை வந்து சந்திக்குமாறும் தெரிவித்தார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
0 comments:
Post a Comment