எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தராணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ். மாநகரசபையின் துணை முதல்வர் வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஆரோக்கியநாதன் தீபன் திலீசனும் நியமிக்கப்பட்டள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை(26) பிற்பகல் யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சித் தலைவர் கஜேந்திரகுமா் பொன்னம்பலத்தினால் இவை தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
.
0 comments:
Post a Comment