யாழ். மயிலிட்டி துறைமுகப் பகுதியின் அருகேயுள்ள கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம்(27) கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
மயிலிட்டித் துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடற்கரையில் புதையுண்ட நிலையில் கைக்குண்டு காணப்படுவது தொடர்பில் மீனவர்களால் யாழ். காங்கேசன்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் பொலிஸாரால் கைக்குண்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment