டெங்குக் காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்ணொருவர் இன்று வெள்ளிக்கிழமை(29) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண்மணி டெங்குக் காய்ச்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. எனினும், டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகரித்த காரணத்தால் இன்றைய தினம் அவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். மீசாலை மேற்கைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தரான திருமதி- கீர்த்திகா லக்சன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
0 comments:
Post a Comment