//]]>

Friday, December 29, 2017

நல்லூரில் நாளை பாரதி நினைவரங்கம்(Photo)


யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பாரதி நினைவரங்கம் நாளை சனிக்கிழமை(30) நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பெருந்தலைவரும், வாழ்நாட் பேராசிரியருமான அ. சண்முகதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்  தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தொடக்கவுரையையும், தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழி பண்பாட்டுத் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க. இரகுபரன் நினைவுரையையும் ஆற்றுவர்.

தொடர்ந்து "இன்று புதிதாய்ப் பிறந்தோம்" எனும் தலைப்பில் ஈழத்தின் மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் தலைமையில் கவி அரங்கம் இடம்பெறவுள்ளது.

இந்த நினைவரங்கம் நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment