//]]>

Friday, December 29, 2017

உள்ளுராட்சி வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பாளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது அவசியமெனஅது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கெண்ணும் நிலையங்களுக்குச் செலவதற்கும், பார்வையிடுவதற்கு வசதியாக வேட்பாளர் அடையாள அட்டையை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

ஆகவே, இதற்கென வேட்பாளர்கள் விண்ணப்பிப்பது அவசியம்.

மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பாளர்கள் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கையளிப்பதன் மூலம் வேட்பாளர் அடையாள அட்டையைப் பெற முடியும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment