//]]>

Monday, December 4, 2017

அரசாங்கம் பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை


பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமென ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதியளித்து விட்டுப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை எங்கள் மீது ஏவுவார்களானால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவுள்ளோம். அப்போது தான் இலங்கை அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் சர்வதேச சமூகத்திற்கு வெளிச்சத்துக்கு வரும். பிரபாகரனின் பிறந்தநாளை அனுஷ்டித்தமைக்காக எங்களைக் கைது செய்தால் அரசாங்கம் பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்தில் கேக் வெட்டி அவரது பிறந்தநாளைக் கொண்டாடியமை தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரூடாக விசாரணை நடாத்தப்படவுள்ளது எனப்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

தமிழீழ விடுதலைப் புலிகளினால் அரச படைகளுக்கெதிராக முன்னெடுத்து வந்த ஆயுதப் போராட்டம் மெளனிக்கச் செய்யப்பட்டுள்ளதாகக் கடந்த-2009 ஆம் ஆண்டு மேமாதம்-17 ஆம் திகதி அறிவிப்புச் செய்திருந்தார்கள். இந்நிலையில் அரசாங்கத்தின் பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இந்த நாட்டிலில்லை. எனவே, எந்தச் சட்டத்தின் மூலம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? எனவும் கேள்வியெழுப்பினார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment