பிரபல தமிழ் இணையத்தளச் செய்திச் சேவையின் முகாமையாளரால் குறித்த ஊடக நிறுவனத்தில் கடமையாற்றும் யாழ். மாவட்டப் பிராந்தியச் செய்தியாளருக்கு நேற்றைய தினம்(03) காலை தொலைபேசியூடாகக் கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாகக் குறித்த இணையத்தள முகாமையாளருக்கெதிராக நேற்று மாலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக இன்றைய தினம்(04) சுன்னாகம் பொலிஸார் விசாரணை நடாத்தியுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் குப்பிளான் பகுதிக்கு வருகை தந்து முறைப்பாட்டாளர் என்ற ரீதியில் இன்று பிற்பகல்-02.15 மணியளவில் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகக் குறித்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment