எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது புத்திரனைக் களமிறக்கவுள்ளவுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மாவை சேனாதிராஜாவின் மகனான கலையமுதன் கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளார். இந்நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ளார். இவ்வாறான நிலையில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகன் வலி. வடக்குப் பிரதேச சபையில் போட்டியிடவுள்ளதாகவும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment