//]]>

Sunday, December 17, 2017

முன்னிலை வகிக்க வேண்டுமென்பதற்காக நம்பகத் தன்மையை ஆராயாமல் செய்திகள் வெளியிடும் சில ஊடகங்கள்:வடக்கு முதல்வர் காட்டம்(Photo)

சில ஊடகங்கள் செய்திகளைப் பிரசுரிப்பதில் முன்னிலை வகிக்க வேண்டுமென்பதற்காகச் செய்திகளின் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து அறியாமல் விரைந்து பிரசுரிப்பதன் மூலம் பல தவறான செய்திகளை அல்லது தவறான அர்த்தங்களை வழங்கக் கூடிய செய்திகளை மக்களுக்கு வழங்கி அவர்களைக் குழப்ப நிலைக்குட்படுத்தியுள்ளமை பல்வேறு சந்தர்ப்பங்களில் உணரப்பட்டுள்ளது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்.ஊடக அமையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(17) முற்பகல்-10.30 மணியளவில் விஜயம் செய்த முதலமைச்சர் அங்கு ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு பொதுமகனும் தினமும் காலையில் எழுந்தவுடன் தனது முதலாவது தேநீர்க் கோப்பையுடன் சேர்த்து அன்றைய புதினப் பத்திரிகைகளின் பிரதான செய்திகளையும் உள்வாங்கி அவற்றின் அடிப்படையிலேயே அன்றைய கருமங்களை ஆற்ற முனைகின்றனர்.

எனவே, புதினப் பத்திரிகைகள் உண்மையானதும், நடுநிலையானதுமான செய்திகளை விம்பங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள் போன்று பிரசுரிக்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment