//]]>

Sunday, December 17, 2017

ஊடகவியலாளர்களுக்கு வடக்கு முதல்வரின் அறிவுரை(Video)

ஊடகவியலாளர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் இன ஒற்றுமைக்காகவும், சமூகங்களின் மேம்பாட்டிற்காகவும் செயற்பட முன்வர வேண்டும் என வடக்கு முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் ஊடகவியலாளர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தின் ஐந்தாவது ஆண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை(17) முற்பகல்-10.30 மணி முதல் மேற்படி அமையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். ஊடக அமையம் தனது ஐந்தாவது ஆண்டுக்கான வெற்றிப் பயணத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இத்தருணத்தில் அவர்களின் சேவைகளைப் பாராட்டுவதுடன் உன்னதமான ஊடகத் துறையில் நேர்மையானதும், நடுநிலையானதுமான பயணத்தை மேற்கொள்ள எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment