//]]>

Sunday, December 3, 2017

யாழில் பொதுமக்களுடன் திடீர் சந்திப்பு நடாத்திய வடமாகாண சபை உறுப்பினர் (Photos)


வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் இன்று ஞாயிற்றுக்கிழமை(03)  யாழ்.  வலி.தென்மேற்கு(மானிப்பாய்) பிரதேசசபைக்குட்பட்ட  பல பகுதிகளையும் சேர்ந்த பொதுமக்களுடன் திடீர்ச் சந்திப்புக்கள் நடாத்தியுள்ளார்.  

குறித்த பகுதிகளிலுள்ள பல சனசமூக நிலையங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாகக்  கலந்துரையாடியதுடன், மாகாணசபையின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெறப்பட்ட வீதி மின் விளக்குகளையும் பொதுமக்களுக்குக் கையளித்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்களில் வடமாகாணசபை உறுப்பினருடன், வலி.தென்மேற்குப் பிரதேசசபையின் செயலாளர் சற்குணராசா, வலி.தென்மேற்குப்  பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்களான க.கௌரிகாந்தன், ஆ.சி.கணேசவேல் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment