வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையின் வடமாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான காலநிலை தொடருமெனத் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை(21) எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மழையுடனான காலநிலை நிலவும் சந்தர்ப்பத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக் கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது. எனவே, கடற் தொழிலாளர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment