கூட்டுறவுப் பெரியார் அமரர்- வீரசிங்கத்தின் 53 ஆவது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை(05) முற்பகல்-10 மணி முதல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வடமாகாணக் கூட்டுறவு, மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணப் புதி ய கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ. வாகீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கூட்டுறவுப் பெரியார் அமரர்- வீரசிங்கத்தின் உருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது கடந்த நெருக்கடியான காலங்களில் வடமாகாணத்தில் சிறப்பாகச் சேவை யாற்றிய மூத்த கூட்டுறவாளர்கள் 64 பேர் விசேடமாகக் கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment