//]]>

Thursday, December 7, 2017

யாழ். பாடசாலைகளில் காப்புறுதித் திட்டத்தை ஆரம்பித்து வைத்த வடமாகாண சபை உறுப்பினர்(Photos)

யாழ். இந்துக்கல்லூரி, கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயம் மற்றும் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இன்று வியாழக்கிழமை(07) காப்புறுதித் திட்ட அறிமுக நிகழ்வு நிடம்பெற்றது.  

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டார்.

இன்று வியாழக்கிழமை காலை- 08 மணியளவில் யாழ்.இந்துக்கல்லூரியிலும், காலை- 09 மணியளவில் கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திலும் , காலை-11 மணியளவில் கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயத்திலும் காப்புறுதித் திட்ட அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொண்டு குறித்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். 

குறித்த நிகழ்வுகளில் வடமாகணசபை உறுப்பினருடன் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். 

அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள சுமார் 45 இலட்சம் பாடசாலை மாணவர்கள் பயனடையவுள்ளதுடன், மாணவர்களுக்கோ அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கோ ஆபத்துக்களோ, உயிரிழப்புக்களோ ஏற்படும் சந்தர்ப்பத்தில் உரிய இழப்பீடுகள் வழங்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment