//]]>

Thursday, December 7, 2017

ஈ.பி. ஆர். எல்.எவ் அணியால் ஏமாற்றப்பட்டுள்ளோம்!: கவலை வெளியிடுகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Video)


ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி. ஆர். எல்.எவ்) மீது நாங்கள்  அதிகளவான மரியாதை வைத்திருந்ததுடன் அவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கும், அவர்களுடன் அனைத்து விட்டுக் கொடுப்புக்களையும் மேற்கொள்வதற்குத் தயாராகவிருந்தோம். இந்நிலையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அதற்கு மாறாகச் செயற்பட்டதன் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டுள்ளார். 

இன்று வியாழக்கிழமை(07) பிற்பகல் யாழ்.கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 




அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ. பி. ஆர்.எல். எவ்  தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் பேச்சுவார்த்தை நடாத்திய போது தரம் கெட்ட ஆனந்தசங்கரியின் அணுகுமுறை அவருடைய கொள்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம். அப்போது ஆனந்தசங்கரிக்கோ அல்லது அக் கட்சியிலுள்ள உறுப்பினர்களுக்கோ உதயசூரியன் சின்னத்துடன் எவ்வித தொடர்பும் காணப்படாது. 

முற்றுமுழுதாக உதயசூரியன் சின்னம் எங்களுடைய பொறுப்புக்கு வழங்கப்படுமெனச் சொல்லப்பட்டது. ஆனந்த சங்கரி ஒரு தரப்பாகக் கூடக் காணப்பட மாட்டார் எனவும் எங்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. 

ஆனால், புதிய கூட்டணி நேற்றைய தினம் யாழில் உதயமான போது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்குப் பக்கத்தில் ஆனந்தசங்கரி காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. 

அவர்களுக்கு அருகில் நான் அரசியலுக்கு வருகை தந்த பின்னர் இதுவரை காணாத பல புதுமுகங்கள்  தங்களையும் கட்சிகள், பொது அமைப்புக்கள் என அடையாளப்படுத்தியவர்களாக அமர்ந்திருந்தனர் எனவும் சாடியுள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment