//]]>

Wednesday, December 20, 2017

வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பம்: யாழில் 24 மணி நேர மழைவீழ்ச்சி நிலவரம்(Video)

நேற்றுச் செவ்வாய்க்கிழமை(19) வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(19) காலை-08.30 மணி தொடக்கம் இன்று புதன்கிழமை காலை-08.30 மணி வரையான யாழ். மாவட்டத்தின் 24 மணித்தியால மழைவீழ்ச்சி நிலவரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை(20) அவர் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரிப் பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 57.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், திருநெல்வேலிப் பகுதியில் 52.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், நெடுந்தீவுப் பகுதியில் 49.0 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பருத்தித்துறைப் பகுதியில் 48.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், யாழ். கோட்டைப் பகுதியில் 40.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நயினாதீவுப் பகுதியில் 39.9 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், யாழ். கச்சேரிப் பகுதியில் 30.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், அச்சுவேலிப் பகுதியில் குறைந்தளவாக 19.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment