யாழ். சண்டிலிப்பாயில் கடந்த இரு தினங்களாக காணாமற் போயிருந்த இளைஞனொருவன் பாழடைந்த வயல் கிணற்றிலிருந்து இன்றைய தினம்(04) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் உடலில் பல அடிகாயங்கள் காணப்படுவதால் அவர் படுகொலை செய்யப்பட்டுக் கிணற்றினுள் வீசப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மானிப்பாய்ப் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபகுதியைச் சேர்ந்த முருகானந்தன் ஆனந்தபாபு(வயது- 21) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
0 comments:
Post a Comment