//]]>

Tuesday, January 9, 2018

சங்கத்தானையில் புகையிரதத்திலிருந்து தவறிவிழுந்த முதியவர் படுகாயம்


கொழும்பிலிருந்து யாழ். நகரம் நோக்கிப் பயணித்த புகையிரதத்திலிருந்து தவறிவிழுந்து 70 வயதுடைய முதியவரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். சங்கத்தானை புகையிரத நிலையப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(09) அதிகாலை- 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி புகையிரதத்தில் பயணித்த அவர் சங்கத்தானை புகையிரத நிலையப் பகுதியில் தவறுதலாக விழுந்து புகையிரதத்தில் மோதுண்டதாகத் தெரியவருகிறது.

இந்த விபத்தில் கொறணைப் பகுதியைச் 70 வயது முதியவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment