//]]>

Thursday, January 11, 2018

ஐந்து பிள்ளைகளுடன் காணாமல் போன இளம் தாய்: யாழில் பரபரப்பு

யாழ். நல்லூர் அரசடி வீதியைச் சேர்ந்த இளம் தாயொருவர் தனது ஐந்து பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதீபன் திவானி (வயது-36) என்பவருடன் அவரது பிள்ளைகளான பிரதீபன் கஜநிதன்( வயது-11), பவனிதன் (வயது-09), அருள்நிதன் (வயது-08) மற்றும் அவரது இரட்டைப் பிள்ளைகளான யதுசியா, யஸ்ரிகா (வயது-02) ஆகிய ஜந்து பிள்ளைகளும் காணாமல் போயுள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் யாழ். நல்லூர்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment