//]]>

Thursday, January 11, 2018

'நீ கள்வனா? நான் கள்வனா?':சுரேஷ் பிரேமச்சந்திரன் புதுவிளக்கம்(Video)

நீ கள்வனா...? நான் கள்வனா...? என அரசாங்கத் தரப்பும், மகிந்த தரப்பும் மாறி மாறிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில் இவர்கள் அனைவருமே  கள்வர்களாகத் தானிருக்கின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை(11) முற்பகல்-11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு சாடியுள்ளார். 

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி  வகித்த காலப் பகுதியிலும் பாராளுமன்றத்தில் பல களேபரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், புதன்கிழமை பாராளுமன்றத்தில் மிக மூர்க்கத்தனமான முறையில் களேபரம் நடைபெற்றது மாத்திரமல்லாமல் பிரதமர் 'யார் கள்வன்' என்று கூக்குரலிட மகிந்த கள்வன் என்று அரசாங்கத் தரப்பினர் கூக்குரலிட்டனர். உலகத்திலுள்ள பாராளுமன்றங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு செயற்பட்டாலும்  நாட்டுக்குத் தலைமை தாங்கும் பிரதமரே அதனை முன்னின்று நடாத்துவது இதுவரை வேறெங்கும் நடைபெறாத ஒன்று. 

நாங்கள் ஊழலை ஒழிப்போம்...நல்லாட்சியை உருவாக்குவோம் எனத் தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள் பிணை முறி விவகாரத்தில் மாட்டுப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள

கடந்த- 2008  ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்  பிணை முறி விவகாரத்தை எவ்வாறு கையாண்டார்?, எத்தனை ஆயிரம் பில்லியன் ரூபாக்கள் களவாடப்பட்டது போன்ற பல விடயங்களை நாங்கள் ஆராயப்போகிறோம் எனக் கூறுகிறார்கள். 

உண்மையைச் சொல்லப் போனால் முன்னைய அரசாங்கம் மிக மோசமாகச் செயற்பட்டது என்பதும் பல பில்லியன் ரூபாக்களைத் திருடியதும், இதனால், அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதும் உண்மை. 

ஆனால், நல்லாட்சி என அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பவர்களும் அதே தவறுகளை இழைத்துள்ளார்கள் . மிக மோசமான ஊழலில் தற்போது சிக்கியிருக்கிறார்கள. இது எந்தவகையிலும் ஏற்புடைய விடயமன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment