இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, பொலநறுவை மாவட்டங்களிலும் நூறு மில்லி மீற்றர் வரையான கடும் மழை பெய்யலாம் .நாட்டின் வடக்குப் பகுதியிலும், மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடையிடையே பலமான காற்று வீசும். அது மணிக்கு 40 கிலோமீற்றராக அமையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கும்.
எனவே, இடி, மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment