வடக்கு முதலமைச்சரின் போக்குவரத்துத் துறைசார்ந்த தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து நாளை வியாழக்கிழமை(04) இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலையில் போக்குவரத்துச் சபை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களை இன்று இரவு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். எனினும், இந்தச் சந்திப்பில இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தைக் கைவிடுவதற்கான தீர்வெதுவும் அமைச்சரால் முன்வைக்கப்படவில்லை.
மேலும், வவுனியா புதிய பேருந்து நிலையம் தொடர்பாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள மூன்று கோரிக்கைகளும் முதலமைச்சரால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையிலேயே நாளைய தினம் வவுனியாவில் முதலமைச்சருக்கெதிராக காலவரையற்ற போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கம் நாளை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிக் கலந்துரையாடல் மேற்கொண்ட பின்னர் முதலமைச்சருக்கெதிராக யாழ்ப்பாணத்திலும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற்சங்கத்தின் முக்கியஸ்தரொருவர் சற்று முன்னர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment