ஜனாதிபதி பதவியை விட்டு இன்று கூட விலகிச் செல்லத் தயாரென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தமது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது? என விளக்கமளிக்குமாறு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உச்சநீதிமன்றத்திடம் அண்மையில் விளக்கம் கோரியிருந்தார். இந் நிலையில் அக்குரஸ்ஸவில் நேற்று(12) இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
எனது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவானாலும் அதனை ஏற்றுக் கொள்வேன். அதிபர் பதவியை இன்றும் கூடக் கைவிட்டுச் செல்வதற்குத் தயார்.
ஜனாதிபதியாக என்னால் எவ்வளவு காலம் பணியாற்ற முடியும் என்பது தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுவதால் தான் உச்சநீதிமன்றத்தை தெளிவுபடுத்துமாறு கோரினேன்.எப்போதும் அதிபர் பதவியில் இருப்பதற்காக நான் ஆட்சிக்கு வரவில்லை. எனினும், நாட்டை முன்னேற்றும் கனவை நிறைவேற்றுவதற்காகப் பதவியிலிருக்கின்றேன் எனவும் கூறினார்.
0 comments:
Post a Comment