தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் நாளை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ். மாவட்டத்தில் தைப்பொங்கல் பண்டிகை இன்று சனிக்கிழமை(13) அதிகாலை முதல் மிகவும் களைகட்டியுள்ளது.
தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையை அண்டியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மண்பானைகளின் வியாபாரம் அமோகமாக இடம்பெற்று வருகிறது.
மண்பானைகளில் சிறிய பானையொன்று 150 ரூபாவாகவும், அதற்கு அடுத்துள்ள தரத்திலான பானைகள் 500 ரூபா, 550 ரூபா, 600 ரூபா ஆகிய பல்வேறு விலைகளிலும் விற்பனையாகிறது.
இந்த வருடம் கடந்த வருடத்தை விட அதிகளவிலான மண்பானைகள் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment