//]]>

Wednesday, January 17, 2018

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிறது

எதிர்வரும் பெப்ரவரி-10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதன்கிழமை(17) காலை-09.30 மணியளவில் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தமிழர் சமவுரிமை இயக்கம், நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து தமிழ்த்  தேசியப் பேரவை எனும் கூட்டினை அமைத்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வட, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment