அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்காமையால் தைப்பொங்கல் தினத்திலும் மக்கள் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை வருத்தமளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
தைப்பொங்கல் தின விழாவொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;
தற்போதைய அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை காண்பதை விட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அதிக காலம் செல்கிறது. தமிழ் மக்கள் பல்வேறு எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கினர்.
எனினும், தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை அரசாங்கத்திடமிருந்து உரிய தீர்வு கிட்டப்படவில்லை.இதன் காரணமாகத் தற்போதைய தேர்தல் காலத்தில் எமது மக்கள் முன்னிலையில் செல்வதற்கு வேட்பாளர்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment